உளவியல் ஆலோசனை பயிற்சி பட்டறை

முதன் முறையாக தமிழில்

சென்னை கவுன்சலிங் சர்வீஸஸ் முதன் முறையாக உளவியல் ஆலோசனையை முழுவதும் தமிழில் கற்றுக்கொள்ள இரண்டு நாட்களுக்கு பயிற்சி பட்டறையை நடத்துகிறது.

பயிற்றுநர் :

இராம. கார்த்திக் லெட்சுமணன் M.Sc. (Coun. Psy.), M.Phil. (Psy. Onc.), SET (Psy.)
உதவிப் பேராசிரியர், முதுநிலை உளவியல் ஆலோசனை துறை, சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூர்.

கார்த்திக் அவர்கள் 7 வருடங்களாக உளவியல் ஆலோசனை துறையில் பணியாற்றி வருகிறார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்காக, உளவியல் ஆலோசனை, உயிரி உளவியல், உளவியல் சோதனைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று பாடப்புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார். புதிய தலைமுறை, சன் நியூஸ், தந்தி டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் உளவியல் ஆலோசனை நிபுணராக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது சென்னை சமூகப்பணி கல்லூரியில் முழு நேர உதவிப்பேராசிரியராகவும், சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (IIT-Madras), வருகைதரு உளவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

சென்னை கவுன்ஸிலர்ஸ் ஃபௌண்டேஷனில் 2013-15 ஆண்டுகளில் செயலாளராக தேர்தலில் தேர்வாகி பணியாற்றினார். தற்போது அசோசியஷன் ஆஃப் இண்டியன் சைக்காலஜிஸ்ட்-ல்  (www.aiponline.in) பொது செயலாளராக இருந்து வருகிறார்.

தன்னுடைய முதுநிலை ஆய்வியல் பட்டத்தை, புற்றுநோய் உளவியலில் அடையாறு புற்று நோய் மருத்துவமனையிலும், முதுநிலை ஆலோசனை உளவியல் பட்டத்தை சென்னை சமூகப்பணி கல்லூரியிலும் முடித்திருக்கிறார்.

வாழ்க்கையில் தனக்கான துறையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுதல், சிறந்த பெற்றோராக இருக்க உதவுதல், தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், பாலியல் கல்வி, நேர மேலாண்மை, சுய மதிப்பை மேம்படுத்துதல், திருமணத்திற்கு தயார்படுத்திக் கொள்ளல், குறிக்கோள்களை வகுத்தல், யாரும் புண்படாவண்ணம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளல், குழுக்களில் செயல்படுதல், மன அழுத்த மேலாண்மை, கருத்து-வேற்றுமை மேலாண்மை, நினைவாற்றலை மேம்படுத்துதல் போன்ற உளவியல் பயிற்சிகளை வகுத்து கல்வி நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் நடத்தி வருகிறார்.

தேதி : அக்டோபர் 1 (ஞாயிறு) மற்றும் 2 (திங்கள்), 2017

கட்டணம் : ரூ. 3000/- மதிய உணவு, தேநீர், பயிற்சி கையேடு (ம) சான்றிதழ் வழங்கப்படும்.

நாள் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : இக்சா – ஜீவன ஜோதி, 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 8

அரசு அருங்காட்சியகம்/கன்னிமரா நூலகம் எதிரில்

பயிற்சியில் கலந்து கொள்ள, +91 – 9362994035 என்ற தொலைபேசி எண்ணை செப்டம்பர் 18-க்குள் தொடர்பு கொள்ளவும்
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும்

பயிற்சியின் முக்கிய அம்சங்கள் :

  • சிறந்த உளவியல் ஆலோசகரது திறன்கள்
  • உளவியல் ஆலோசனையின் அடிப்படை நிலைகள் (Core Conditions)
  • உளவியல் ஆலோசனையின் படிகள் (Stages)
  • நட்புணர்வு, நம்பிக்கையை உருவாக்கும் நுட்பங்கள்
  • விருப்பமின்றி உளவியல் ஆலோசனைக்கு வருபவர்களை கையாளும் நுட்பங்கள்
  • உளவியல் ஆலோசனையின் நீதி நெறி கோட்பாடுகள்
  • நேரடி உளவியல் ஆலோசனைக அமர்வுகள் (Live Counselling Sessions)