இராம.கார்த்திக் லெக்ஷ்மணன் அவர்கள் 7 வருடங்களாக உளவியல் ஆலோசனை துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை சமூகப்பணி கல்லூரியில் முழு நேர உதவிப்பேராசிரியராகவும், சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (IIT-Madras), வருகைதரு உளவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

  • தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்காக, உளவியல் ஆலோசனை, உயிரி உளவியல், உளவியல் சோதனைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று பாடப்புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார். புதிய தலைமுறை, சன் நியூஸ், தந்தி டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் உளவியல் ஆலோசனை நிபுணராக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

    சென்னை கவுன்ஸிலர்ஸ் ஃபௌண்டேஷனில் 2013-15 ஆண்டுகளில் செயலாளராக தேர்தலில் தேர்வாகி பணியாற்றினார். தற்போது அசோசியஷன் ஆஃப் இண்டியன் சைக்காலஜிஸ்ட்-ல்  (www.aiponline.in) பொது செயலாளராக இருந்து வருகிறார்.

    தன்னுடைய முதுநிலை ஆய்வியல் (M.Phil) பட்டத்தை, புற்றுநோய் உளவியலில் அடையாறு புற்று நோய் மருத்துவமனையிலும், முதுநிலை ஆலோசனை உளவியல் (Counselling Psychology) பட்டத்தை சென்னை சமூகப்பணி கல்லூரியிலும் முடித்திருக்கிறார்.

    வாழ்க்கையில் தனக்கான துறையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுதல், சிறந்த பெற்றோராக இருக்க உதவுதல், தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், பாலியல் கல்வி, நேர மேலாண்மை, சுய மதிப்பை மேம்படுத்துதல், திருமணத்திற்கு தயார்படுத்திக் கொள்ளல், குறிக்கோள்களை வகுத்தல், யாரும் புண்படாவண்ணம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளல், குழுக்களில் செயல்படுதல், மன அழுத்த மேலாண்மை, கருத்து-வேற்றுமை மேலாண்மை, நினைவாற்றலை மேம்படுத்துதல் போன்ற உளவியல் பயிற்சிகளை வகுத்து கல்வி நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் நடத்தி வருகிறார்