Menu Close

Books Written

Books Written

1. Book on Tobacco Cessation

புகை பிடிப்பதை விட்டுவிடுவது சாத்தியமே – It is possible to quit Smoking

இராம. கார்த்திக் லெட்சுமணன், உளவியல் ஆலோசகர் & அன்வர், சிகரெட்டை வென்றவர், மணிமேகலை பிரசுரம், விலை: ரூ.75/-

சிகரெட் பிடிப்பவர்கள் பலரும் “விட்டுவிட வேண்டும் என்றுதான் நினைக்கிறோம் ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை” என்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டவே இந்த நூலை எழுதியிருக்கிறோம். சிகரெட் பழக்கம் பற்றி ஆராய்ச்சி செய்துள்ள ஒருவரும், சிகரெட் பழக்கத்தை பல வருடங்களாக கொண்டு, பின்னர் தன் விடா முயற்சியால் வென்று காட்டிய ஒருவரும் புகை பிடிப்பதை விட்டுவிடுவதற்கான அறிவியல் பூர்வமான முறைகளையும், அனுபவங்களையும் சரியான விகிதத்தில் கலந்து சிகரெட்டே சொல்வது போல அளித்திருக்கிருக்கிறோம்.

நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இல்லாவிட்டாலும், உங்கள் அன்புக்குரியவர்கள் சிகரெட் பிடிக்கலாம், விட வேண்டும் என முயற்சி செய்யலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தகத்தை பரிசாக அளித்து அவர்களை சிகரெட்டுக்கு பலியாகாமல் தடுக்கலாம். நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால், இந்த புத்தகத்தை வாங்கி சிகரெட்டை வெல்ல ஒரு முக்கியமான படியை எடுத்துவைக்கலாம்.

2. Psychology for you (Tamil)

உளவியல் உங்களுக்காக என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த மின்னூல் பின்வரும் 15 உளவியல் கட்டுரைகளை உள்ளடக்கியது.

இணையத்தில் படிக்க : http://ulaviyal.pressbooks.com/
பதிவிறக்கம் செய்ய : http://freetamilebooks.com/ebooks/ulaviyal/

1.கள்ளக்காதல் எனப்படும் கூடுதல் உறவுகள் தேவையா?
2. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
3. என்று ஒழியும் இந்த பொறியியல் மோகம்?
4. பாலினமும் பாலுறவும் அறிவியல் என்ன சொல்கிறது
5. உளவியல் உதவிகள் மூலம் மன நலத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்
6. பிடித்து படியுங்கள், புரிந்து படியுங்கள்!
7. இதப்படிங்க! புகையிலைப் பழக்கத்த்தை எளிதில் விட்டொழிக்கலாம்!
8. மன நலம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

9. சிறந்த பெற்றோர்களாக இருக்க…
10. வாழ்க்கைப்பாதை என்பது தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது, அதுவாக அமைவதன்று!
11. காதல் மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்!
12. மாற்ற முடியுமா? மாற முடியுமா?
13. அனைவருக்கும் தேவை அசர்ட்டிவ்னெஸ்!
14. சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது சாத்தியமே!
15. மதுவுக்கு அடிமையாவது ஓர் உடல், மன, குடும்ப, சமுதாய நோய்