Menu Close

உளவியல் ஆலோசனையில் இணைய வழி பட்டயம் (டிப்ளமோ)- திறன்மேம்பாட்டு பயிற்சி (Online Live Diploma in Psychological Counselling via Google Meet)

Diploma in School, Corporate & Family Counselling - image
உளவியல் ஆலோசனையில் பட்டயப் படிப்பு
பயிற்சியின் குறிக்கோள் :
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக பணியாற்ற விரும்புபவர்களுக்காகவும், சொந்த ஆலோசனை மையத்தைத் தொடங்க விரும்புவோர்களுக்காகவும் இந்த இணைய நேரலை பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பயிற்றுநர் தனது உளவியல் ஆலோசனையின் நடையினை பகிர்ந்துகொள்வார், மேலும் தங்களின் தனித்துவமான ஆலோசனை நடையை உருவாக்க உங்களுக்கு உதவுவார்.

ஏற்கனவே 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உளவியல் ஆலோசனையில் பயிற்சி அளித்திருக்கும் சிசிஎஸ் அகாடமி, சென்னை தற்போது தமிழ் வழியில் இந்த பயிற்சியை நடத்துகிறது.
பயிற்றுநர் :
கார்த்திக் லட்சுமணன் M.Sc. (Coun. Psy.), M.Phil. (Psy. Onc.), SET (Psy.)
மூத்த உளவியல் ஆலோசகர், இந்தியத் தொழில் நுட்ப கழகம், சென்னை (IIT- Madras) / தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆலோசனை பாட நூலை எழுதியவர்
மொத்த இருக்கைகள் :
20
நேரம் :
இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை (12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை)
நாட்கள் :
செப்டம்பர் 14 முதல் 25 வரை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர) - 25வது பயிற்சிக்குழு
தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
காணொளி காட்சி வழியாக 5 நிமிடங்களுக்கு நடத்தப்படும் நேர்காணலுக்கு பின்னர், பயிற்சியில் பதிவு செய்து, கட்டணத்தை செலுத்தவும். நேர்காணலுக்கான நேரத்தை முடிவு செய்ய +91 9840924035 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் செயலி மூலமாக செய்தி அனுப்பவும்.
கட்டணம் :
இந்திய ரூபாய் 8500/- .கட்டணம் செலுத்துவதற்கு முன், கட்டணத்தை திரும்பபெறுதல்/பதிவினை இரத்து செய்தலுக்கான கொள்கை ஆவணத்தை படிக்கவும் https://counselingchennai.com/refund-and-cancellation-policy/
பயன்படுத்தப்படும் செயலி :
குகிள் மீட். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் 4வது கேள்விக்கான பதிலை படிக்கவும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பயிற்சியின் போது, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும்

மேலும் விபரங்களுக்கு, பயிற்சிகள் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தை https://counselingchennai.com/faq-about-courses/ பார்வையிடவும், அதற்கு பின் +91 9840924035 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் செய்தி மட்டுமே அனுப்பவும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. ஆகவே பயிற்சியில் சேர்வதற்கான கடைசி தேதி என்று எதுவும் கொடுப்பப்படவில்லை. 

பயிற்சி தொடங்குவதற்கு முந்தைய நாளில் தமிழ் & ஆங்கிலத்தில் PDF வடிவ பாட நூல் மற்றும் பயிற்சி முடித்தபின் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

இந்திய சட்டங்களின்படி, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை எந்த ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமும் வழங்கலாம். பல்கலைக்கழக இணைப்பு அவசியம் இல்லை. (பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே பல்கலைக்கழக இணைப்பு அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது).

சிசிஎஸ் அகாடமி, சென்னை கௌன்சலிங் சர்விஸஸ்-ன் ஓர் அங்கம். சென்னை கௌன்சலிங் சர்வீஸஸ், இந்திய அரசின் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முடித்தவுடன் அப்பதிவு எண்ணுடன் சான்றிதழ் வழங்கப்படும். ஆகவே இப்பயிற்சியின் சான்றிதழ் இந்திய சட்டங்களின் படி, அங்கீகரிக்கப்பட்டவையே! கணிணி துறையில் என்.ஐ.ஐ.டி, சி.எஸ்.சி போன்ற நிறுவனங்கள் பல்கலைக்கழக இணைப்பு பெறாமலேயே திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்துவதை போன்று சிசிஸ் அகாடமி, உளவியல் ஆலோசனை துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சியை நடத்துகிறது.

மேற்கோள்கள் : http://www.indiaeducation.net/careercenter/10-and-12/degree-and-diploma.aspx, https://en.wikipedia.org/wiki/Diploma

பயிற்சி தலைப்புகள் :

 1. Psychological Counselling – An introduction/உளவியல் ஆலோசனை – ஓர் அறிமுகம்
 2. Relationship between Guidance, Counselling and Psychotherapy and their Legal Status – வழிகாட்டுதல், உளவியல் ஆலோசனை, உளவியல் சிகிச்சை இடையேயான தொடர்பு (ம) அவற்றின் சட்ட நெறிமுறைகள்
 3. Subject Matter of Life Coaching/Guidance and Counselling/ வழிகாட்டுதல்/வாழ்க்கை பயிற்சி, உளவியல் ஆலோசனையின் உட்பொருள்
 4. Easy Integration Model of Counselling & Life Coaching (TM) – How to choose a school of thought or approach for a client? / ஈஸி இன்டகரேஷன் மாடல் ஆஃப் கௌன்சலிங் & லைஃப் கோச்சிங் –  உளவியல் ஆலோசனை பெற வருபவருக்கான அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
 5. Qualities of an Effective Counselor / ஒரு சிறந்த உளவியல் ஆலோசகரின் குணநலன்கள்
 6. Abnormal Psychology for Counsellors / உளவியல் ஆலோசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மனநோய்கள்
 7. Liaison with other health professionals / பிற நலப்பணியாளர்களுடனான தொடர்பு
 8. Rogers’ Person Centered Therapy / ரோஜர்ஸ் அவர்களின் மனிதர்களை மையப்படுத்திய உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 9. Application of Abraham Maslow’s Needs theory in Counselling/ உளவியல் ஆலோசனையில் ஆப்ரஹாம் மாஸ்லோ அவர்களின் தேவைகள் கோட்பாட்டினை பயன்படுத்துதல்
 10. Gestalt Therapy முழுமை சார் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 11. Rational Emotive Cognitive Behaviour Therapy பகுத்தறிவு உணர்ச்சி அறிவாற்றல் நடத்தைசார் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 12. Cognitive Therapy அறிவாற்றல்சார் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 13. Transactional Analysis/ பரிமாற்ற பகுப்பியல் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 14. Solution Focused Brief Therapy/ தீர்வில் கவனம் செலுத்திக் குறைவான நேரத்தில் அளிக்கப்படும் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 15. Reality Therapy / யதார்த்தசார் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 16. Behaviour Therapy/  நடத்தைசார் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 17. Life Skills Approach/வாழ்க்கைத்திறன் உளவியல் ஆலோசனை அணுகுமுறை
 18. Using Counselling for Different Contexts / வேறுபட்ட சூழல்களில் உளவியல் ஆலோசனையைப் பயன்படுத்துதல்
 19. School and College Counseling /பள்ளி, கல்லூரிகளில் உளவியல் ஆலோசனை
 1. Corporate Counseling / வணிக நிறுவனங்களில் உளவியல் ஆலோசனை
 2. Career Guidance & Counseling/ தொழில்-கல்வி வழிகாட்டுதல் & உளவியல் ஆலோசனை
 3. De-addiction Counselling: Mobile/Internet/Gaming, Tobacco and Alcohol/ கைப்பேசி/இணையம்/விளையாட்டு, புகையிலை, மதுப் பழக்கங்களிலிருந்து வெளிவர உளவியல் ஆலோசனை
 4. Hospital/Health Care Counseling/ மருத்துவமனை/உடல் நல உளவியல் ஆலோசனை
 5. Grief Counselling / துக்கத்திலிருந்து வெளிவர உதவும் உளவியல் ஆலோசனை
 6. Suicide Prevention / தற்கொலைகளைத் தடுத்தல்
 7. Marital/Relationship/Couple’s/Family Counseling/Coaching / திருமண/உறவுகள்/குடும்ப நல ஆலோசனை
 8. Psychological Scales for Counseling Practice உளவியல் ஆலோசனையில் பயன்படுத்தப்படும் உளவியல் அளவுகோல்கள்
 9. Psychological Training Methodologies / உளவியல் பயிற்சி முறைகள்
 10. Preparedness for Marriage / திருமணத்திற்கு தயார்படுத்த்திக்கொள்ளல்
 11. Parenting (Styles) / பெற்றோர்களை வழி நடத்துதல்
 12. Study Skills Training and Conquering Exam Anxiety/ படிப்பு திறன் பயிற்சி மற்றும் தேர்வு பதட்டத்தைக் கையாளுதல்
 13. Work Life Balance வேலையையும், குடும்ப உறவுகளை  சமநிலையோடு பேணுதல்
 14. Stress Management/ Time Management மன அழுத்த மேலாண்மை / நேர மேலாண்மை
 15. Assertiveness/ யாரும் புண்படாத முறையில் நடந்து கொள்ளல்
 16. Ethics in Counselling/Life Coaching Practice உளவியல் ஆலோசனை அளித்தலில் பின்பற்ற வேண்டிய நீதி நெறிகள்
 17. Documentation and Records of Counselling Sessions ஆலோசனை சந்திப்புகளின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள்
 18. Research Methods for Evidence Based Practice/ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உளவியல் ஆலோசனைக்கான ஆராய்ச்சி முறைகள்
 19. Employability Skills of a Counsellor /ஒரு ஆலோசகரின் வேலைவாய்ப்பு திறன்
 20. Starting ones’ own Private Practice- Entrepreneurship Skills/ உளவியல் ஆலோசனை மையம் தொடங்குவதற்கான தொழில் முனைவோர் திறன்
 21. Opportunities for Specialization and Higher Education in Counselling/ உளவியல் ஆலோசனை வகைகளில் சிறப்புநர் ஆதல் மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புகள்

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:

 • நேரடி உளவியல் ஆலோசனை அமர்வுகளை கவனித்தல்
 • நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய உளவியல் நுட்பங்கள்
 • ஆலோசனை பெறவருபவர்கள் சொல்வதை பகுப்பாய்வு மற்றும் கலந்துரையாடல் செய்தல்
 • பயிற்சி பெறுபவர்கள் உளவியல் ஆலோசனை அளிக்கும் போது சிறப்பான மேற்பார்வை
 • குறைவான கோட்பாடுகள் – அதிக நடைமுறை  நுட்பங்கள்
 • கோட்பாடுகளின் எளிய விளக்கங்கள்
 • பயிற்சியை முடித்த பிறகும், தொடர்ந்து செய்யப்படும் மேற்பார்வை உதவி
 • முதுநிலை பட்டயப் படிப்பாக மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு

எவ்வாறு பயிற்சி இருக்கும் என்பதனை புரிந்து கொள்ள, பயிற்சி பெற்றவர்களால் தரப்பட்டிருக்கும் விமர்சனங்களை பார்க்கவும்

குகிள் மதிப்பாய்வுகள்(400-க்கும் மேற்பட்ட விமர்சனங்கள்): https://goo.gl/maps/YS8GcRFGMgJ2 

ஃபேஸ்புக் மதிப்பாய்வுகள்: https://www.facebook.com/pg/counseling/reviews/

இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/karthiklakshmananpsychologist/

முந்தைய நேரடி மற்றும் இணையவழி பயிற்சிகளின் புகைப்படங்களை காண இங்கு கிளிக் செய்யவும்,

பயிற்சி முறைகள்: லந்துரையாடல்கள், ஆலோசனை காணொளிகளை பார்த்தல், நேரடி ஆலோசனை அமர்வுகளையும் மற்றும் விரிவுரைகளைக் கவனித்தல்

Participants' Testimonials

× Chat via Whatsapp