Menu Close

இணைய வழி உளவியல் ஆலோசனை

Online Counselling - image
Online Counselling

உளவியல் ஆலோசனை “வாட்ஸ்அப் வீடியோ கால்” மூலம் அளிக்கப்படுகிறது. தொலைபேசி / மொபைல் / மெசேஜ் மூலம் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது. வாட்ஸ்அப் உங்களது நாட்டில் இல்லையென்றால், ஸ்கைப் (Skype) அல்லது கூகிள் மீட் (Google Meet) செயலியை பயன்படுத்தலாம்.

ஒரு சந்திப்பு பொதுவாக 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடக்கும். கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு முன், கீழ் கொடுக்கப்பட்ட 4 படிகளைப் படிக்கவும்

ஒரு சந்திப்புக்கான கட்டணம் : இந்திய ரூபாயில் 1200/-

கட்டணம் செலுத்துவதற்கு முன், கொடுக்கப்பட்ட சந்திப்பு நேரத்தில் உங்களின்/உளவியல் ஆலோசனை பெற வருபவரின் வருகையை உறுதிப்படுத்திக்கொள்ளவும். கொடுக்கப்பட்ட நேரத்தை பின்னர் மாற்ற முடியாது. வீடியோ அழைப்பிற்காக உங்கள் இடத்தில் இன்டெர்நெட் இணைப்பு வேகமாக இருக்கிறதா என பார்த்துக்கொள்ளவும். குறைந்தபட்சம் 2 அதிவேக இன்டெர்நெட் இணைப்புகளை வைத்திருங்கள். செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெற முடியாது.

ஆன்லைன் ஆலோசனை சந்திப்பு நேரத்தை பெறுவதற்கான் படிகள் :

படி எண் 1: + 91-9840924035 என்ற எண்ணில் ஆலோசகருக்கு வாட்ஸ்அப் மேசேஜ் அனுப்புங்கள் / தொலைபேசியில் அழையுங்கள். உங்களுக்கும், ஆலோசகருக்கும் ஒத்து போகின்ற வகையில் 1 மணி நேர சந்திப்பினை இந்திய நேரப்படி தேர்ந்தெடுக்கவும். கட்டணம் செலுத்திய பின்னரே, சந்திப்பு நேரம் உங்களுக்காக ஒதுக்கப்படும்.

படி எண் 2: கீழ்கொடுக்க்ப்பட்டிருக்கும் 3 வழிகளில் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்துங்கள்.

(1) மேலே உள்ள பட்டனை கிளிக் செய்து நெட்பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு / யுபிஐ வழியாக பணம் செலுத்துங்கள். கட்டண பக்கத்தில் நுழைந்தவுடன் வழிமுறைகளை கவனமாகப் படியுங்கள். கட்டணம் செலுத்திய பின், இ-மெயில் உங்களை வந்தடையும்.
(2) Gpay @ 9362994035
(3) PhonePe அல்லது Paytm போன்ற மற்ற UPI செயலிகள் மூலமாக செலுத்த, chennaicoun-1@okhdfcbank என்ற UPI ID-ஐ பயன்படுத்தவும்.

படி எண் 3: பின்வருவனவற்றைக் குறிப்பிட்டு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புங்கள் / தொலைபேசியில் அழையுங்கள்.
1. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சந்திப்பிற்கான நேரம், 2. மின்னஞ்சல் முகவரி 3. உங்கள் நாட்டில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது எனில், ஸ்கைப் அல்லது கூகிள் மீட் – இரண்டில் எந்த செயலியை பயன்படுத்த வேண்டும்?

உங்களின் சந்திப்பு ஆலோசகரால் பிராக்டோ (Practo) செயலில் பதிவு செய்யப்பட்ட பின்னர், பிராக்டோ மூலமாக உங்களுக்கு இ-மெயில் அனுப்பப்படும். உங்கள் இன்பாக்ஸில் கிடைக்கப்பெறவில்லையெனில், ஸ்பேம் மற்றும் ப்ரொமோஷன்ஸ் பகுதிகளில் பார்க்கவும். அம்மின்னஞ்சலில் நேரில் வந்து பெறும் ஆலோசனை என்றும், முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதனை அப்படி எடுத்துக் கொள்ள வேண்டாம். இது ஆன்லைன் ஆலோசனைக்கான உறுதிப்படுத்தலுக்கான ஒரு வழிமுறையாகும். இ-மெயில் வந்த பிறகு தாங்கள் வேறு ஏதும் தற்போதைக்கு செய்யத்தேவையில்லை.

படி எண் 4: வேறு யாரும் இல்லாத அமைதியான அறையில் உட்கார்ந்து சந்திப்பு நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் வந்து, குறிப்பிட்ட செயலிலில் ஆலோசகருக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பி, ஆலோசகர் பதிலளிக்கும் வரை காத்திருங்கள். ஆலோசகர் உளவியல் ஆலோசனை பெற வேண்டியவருடன் மட்டுமே முதிலில் தனியாக பேசுவார். அதற்கு பின்னரே குடும்பத்தினருடன் பேசுவார். ஹெட்/இயர் ஃபோன்களைப் பயன்படுத்தவும்.

ஆலோசகர் வேறு ஒருவருக்கு உளவியல் ஆலோசனை சந்திப்பினை நடத்திக்கொண்டிருக்கலாம். அவர் முந்தையை சந்திப்பினை முடிக்கும்போது, அவரே உங்களை சந்திப்புக்கு வீடியோ கால் மூலம் அழைப்பார். அதிகபட்சம் 15 நிமிடங்கள் தாமதமாகலாம். கொடுக்கப்பட்ட நேரத்திலிருந்து 15 நிமிடங்கள் வரை காத்திருங்கள். அதற்கு பிறகும் உங்கள் மெசேஜ்-க்கு எந்த பதிலும் இல்லை என்றால் மட்டுமே தொலைபேசியில் + 91-9840924035 என்ற எண்ணுக்கு அழைக்கவும். அதே செயலியில் ஏற்கனவே ஒரு சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கலாம் என்பதால், வீடியோ அழைப்பு செயலி வழியாக அழைக்காதீர்கள்.

பெரியவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க, உளவியல் ஆலோசனை வழங்கப்படுகிறது :

  • திருமண உறவில் ஏற்படும் பிரச்சினைகள் (திருமண ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் / தம்பதிகள் ஆலோசனை)
  • தொழில்/கல்வியை தேர்ந்தெடுப்பதில் குழப்பம்
  • உறவுகளில் சிக்கல்கள்
  • படிப்பில்/வேலையில் செயல்திறன் குறைபாடு
  • மன அழுத்தம் / பதற்றம் / கவலை
  • மனச்சோர்வு
  • இளம் பருவத்தினரின் பிரச்சினைகள்
  • பணியிட மன அழுத்தம் மற்றும் தொடர்புடைய சிக்கல்கள்
  • புகைபிடித்தல் / புகையிலை பழக்கத்தை விட்டுவிடுவதில் உள்ள சிக்கல்கள்
  • புற்றுநோய் தொடர்பான மன நல பிரச்சினைகள்

Client Feedback

× Chat via Whatsapp